பொவதுவாக உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.
ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இவற்றை எளியமுறையில் சமாளிக்க ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அவகோடா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சுத்தமான நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்தவற்றை பயன்படுத்தலாம்.
- ஆளி விதை, சியா எனும் சப்ஜா விதை, நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலில் ஹார்மோன் சுரப்பை சீராக்கலாம்.
- பாதாம், வால்நட், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஹார்மோன்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை கொண்டவையாகும்.
- ப்ராக்கோலி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியமாகும்.
- அவகேடோ, பட்டாணி, சோயா பீன்ஸ், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவை எடுத்து கொள்ளலாம்.
- மஞ்சள், லங்கப்ட்டை தூள், சோம்பு மற்றும் இஞ்சி ஆகிய நான்கையும், நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலும் ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.