பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா வந்த இலங்கை தமிழர்கள்; அகதி அந்தஸ்து வழங்கப்படுமா?

Will refugee status given to 16 srilankan’s who reached Tamilnadu: இலங்கையைச் சேர்ந்த 16 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக நுழைந்துள்ள நிலையில், அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடே விலைவாசி உயர்வால் தவித்து வருகிறது. உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்தநிலையில், இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 16 பேர் செவ்வாய்கிழமை தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதிக்கு படகு மூலம் வந்தடைந்தனர். அவர்கள் தற்போது போலீஸ் காவலில் இருந்து வருகின்றனர். அவர்களில் மூன்று ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்ததாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அகதி அந்தஸ்து வழங்குவதற்கு பொருளாதார சிக்கல்கள் ஒரு காரணமாக இருக்க முடியாது என்று சர்வதேச சட்டத்தை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, இனம், மதம், தேசியம், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் உறுப்பினர் அல்லது அரசியல் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் துன்புறுத்தப்படுவார்கள் என்ற நன்கு அடிப்படையான பயம் கொண்ட ஒருவர், அகதிகளின் நிலை தொடர்பான 1951 ஐநா மாநாட்டின் கீழ் அகதியாகக் கருதப்படுகிறார். இது, 1967 நெறிமுறையுடன், அகதிகள் மீதான சர்வதேச சட்டத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது. மாநாடு மற்றும் நெறிமுறையை தாண்டி, 1983 ஜூலையில் ஏற்பட்ட உள்நாட்டு போரை அடுத்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்தபோது, ​​இலங்கையிலிருந்து வெளியேறிய சுமார் மூன்று லட்சம் தமிழர்களுக்கு இந்தியா தங்குமிடம் வழங்கியது.

மே 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், 2012 முதல், இலங்கையில் இருந்து வரும் எவருக்கும் இந்தியா அகதி அந்தஸ்தை வழங்கவில்லை. தற்போது, ​​தமிழகத்தில் சுமார் 90,000 முகாம் மற்றும் முகாம் அல்லாத அகதிகள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ராஜபட்சே ஆலோசனை நடத்த முடிவு: அமெரிக்கா வரவேற்பு

தற்போது புலம் பெயர்ந்துள்ளவர்களில் சிலர் முன்னர் அகதிகளாகக் கருதப்பட்டார்களா என்றும், புனர்வாழ்வு முகாம்களை விட்டு வெளியேறும் போது அவர்கள் “வெளியேறும் விசாக்களை” பெற்றிருந்தார்களா என்றும் அரசாங்கம் விசாரணை செய்து வருகிறது. தற்போது தமிழகம் வந்துள்ள 16 பேரில் 4 பேர் 2016ஆம் ஆண்டு குடியாத்தம் புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியேறும் விசா பெற்று வெளியேறியதாகவும், அகதிகளுக்கான ஐ.நா ஆணையம் அலுவலகத்தின் (UNHCR) உதவியுடன் அவர்கள் இலங்கைக்குத் திரும்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிலர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள முகாமில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன் வெளியேறும் விசாவைப் பெற்றதால், அவர்கள் மீண்டும் அகதி அந்தஸ்தைப் பெற முடியாது என்று வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழகம் வந்துள்ள 16 பேரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்த கருத்தும் இல்லை என்று மாநில அரசாங்க அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இதனிடையே, பொருளாதார சிக்கல்கள் மற்றும் போருக்கு பிந்தைய நிலைமையை இலங்கை தமிழர்கள் எதிர்கொண்டுள்ளதால், புலம் பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம் மற்றும் நிதியுதவியை இந்தியா செய்யும் முடியும் என்றும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.