போரில் குதிக்க அமெரிக்கா தயாராகிறதா? ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க செயல்திட்டம்

வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா ரசாயன, உயிரியல் தாக்குதலை நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அனுப்பி உதவுவதால் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைனில் தாக்குதல் நடத்த வாய்பு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.
ஆனால் உக்ரைனில் அமெரிக்கா ஆதரவுடன் ரசாயன உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறும்போது, “தனது நாட்டில் ரசாயன ஆயுதங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையே ரஷியா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா போரில் குதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைனுக்கு எதிராக ரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா ஒரு தற்செயல் திட்டத்தை அமெரிக்கா வகுத்துள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி உக்ரைனின் கீவ் இண்டிபென்டன்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
‘புலி அணி’ என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, நேட்டோ பிராந்தியங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க ஆலோசித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரில் நேட்டோ நாடுகள் குதித்தால் அது 3-வது உலக போருக்கு வழி வகுத்து விடும் என்பதால் போரில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்து இருந்தார்.
தற்போது ரஷியா, ரசாயன தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா திட்டம் வகுத்து இருப்பதால் அந்நாடும் போரில் குதிக்க தயாராகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் 3-வது உலக போர் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.