உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலினால், உக்ரைனிலிருந்து ஏராளானோர் வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வரும் நிலையில், உக்ரேனியர்கள் பலர் குழந்தைகளுடன் ருமேனியாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 29 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனிலிருந்து தப்பி அகதிகளாக வரும் உக்ரேனியர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை ருமேனியா செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்.
உக்ரைனிலிருந்து 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து உள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.