ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பிரச்சனையானது கிட்டதட்ட 1 மாதத்தினை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் மீது பல்வேறு தடைகளை பல நாடுகளும் விதித்து வருகின்றன.
சர்வதேச அளவில் பல பொருட்களின் விலையானது பலத்த உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலை, கோதுமை, பல உலோகங்கள், பல்லேடியம், குறிப்பாக நிக்கல், கச்சா எண்ணெய் விலை என பலவும் ஏற்றம் கண்டுள்ளன.
இதற்கிடையில் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை, வணிகத் தடை என பல காரணிகளுக்கு மத்தியில் , அங்கு மக்கள் வாழ்வதற்கு தேவையான செலவினை அதிகரித்துள்ளது.
இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!
சமையல் பொருட்கள் விலை அதிகரிப்பு
இது குறித்து தகவல்களின்படி, சர்க்கரை உள்ளிட்ட சில வீட்டு பொருட்களின் விலையானது கடந்த வாரத்தில் 14% வரையில் உச்சம் தொட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதற்கு மத்தியில் தொடர்ந்து பணவீக்கமானது உயர்ந்து கொண்டே வருகின்றது. இது மேற்கொண்டு கரன்சி மதிப்பு சரிய காரணமாக அமையலாம்.
கரன்சி மதிப்பு வீழ்ச்சி
நடப்பு ஆண்டில் மட்டும் ரஷ்யாவின் கரன்சி மதிப்பு 22 சதவீதம் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவின் பொருளாதார அமைச்சகம் மார்ச் 18-வுடன் முடிந்த காலக்கட்டத்தில் பணவீக்கம் 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2015க்கு பிறகு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.
எவ்வளவு விலை அதிகரிப்பு?
பொதுவாக உணவுகளில், மதுபானம் தயாரிக்கவும் சர்க்கரை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கிடையில் தான் கடந்த வாரத்தில் நல்ல லாபகரமான ஒன்றாக இருந்துள்ளதாகவும் அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போல வெங்காயத்தின் விலையானது நாடு முழுவதும் 13.7% மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் 40.4% அதிகரித்தும் காணப்பட்டது. இதே நாப்கின்களின் விலையானது 4.4% ஏற்றத்திலும், பிளாக் டி-யின் விலை 4% அதிகரித்தும், டாய்லெட் பேப்பர்களின் விலை 3% அதிகரித்துள்ளது.
என்ன காரணம்?
எஸ்பிஐ அசெட் மேனேஜ்மெண்ட்டின் நிர்வாக பங்குதாரரான ஸ்டீபன் இன்னெஸ், பலவீனமான ரூபிள் மதிப்பு தான் இந்த விலை அதிகரிப்பு காரணம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருப்பதால், ரஷ்யாவின் பணவீக்கம் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது மக்களின் வாழ்வாதரத்தினையும் பாதித்துள்ளது.
russia – ukriane crisis! The cost of living for people in Russia is rising sharply
russia – ukriane crisis! The cost of living for people in Russia is rising sharply/ரஷ்யாவில் விஸ்வரூபம் எடுக்கும் விலைவாசி உயர்வு.. மக்கள் வேதனை..!