புதுடில்லி: ரஷ்யா -இந்தியா இடையிலான வர்த்தகம் குறித்து ராஜ்யசபா கூட்டத்தில் ஜெய்சங்கர் விளக்கியுள்ளார்.
ராஜ்யசபாவில் ,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி பதில் நேரத்தில் பேசிய போது, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவிடம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான கச்சா எண்ணெய் மட்டுமே இந்தியா வாங்கி வருகிறது.
தற்போது போர் காரணமாக ரஷ்யாஇந்தியா பணப் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தி சுமூக வர்த்தகம் நடைபெற ஆவன செய்யும் எனக்கூறினார்.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய கரன்சி ஆன ருபெல் மூலமாகவே ஐரோப்பிய யூனியன் நாடுகள் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்தியா உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்க்காமல் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
புதுடில்லி: ரஷ்யா -இந்தியா இடையிலான வர்த்தகம் குறித்து ராஜ்யசபா கூட்டத்தில் ஜெய்சங்கர் விளக்கியுள்ளார்.ராஜ்யசபாவில் ,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி பதில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.