ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்ட பிரபல கனேடிய ஸ்னைப்பர் கொல்லப்பட்டாரா? வெளியாகியுள்ள உண்மை பின்னணி


உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட பிரபல கனேடிய ஸ்னைப்பர் உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதாக கூறப்பட்ட தகவலின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டவர் வாலி என்ற புனைப்பெயரில் அறியப்படும் பிரபல கனேடிய ஸ்னைப்பர். கனடா இராணுவத்தின் சார்பில் இவர் ஈராக்கில் பணியாற்றியதுடன், பின்னர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதுடன், கடந்த வாரம் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், ஸ்னைப்பர் வாலி கொல்லப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில்,ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்டது உண்மை எனவும், தான் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அனைத்தும் கட்டுக்கதை எனவும், தாம் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானது உண்மை எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் போரில் களமிறங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.