இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை நாட்டை உலுக்கி வருவதால் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துவிட்டது. டீசல் கிடைக்காததாலும், பல மணி நேரம் மின்வெட்டாலும் தொழில்கள் முடங்கி கிடக்கிறது.
பொதுமக்கள் உணவு பொருட்களுக்காக அல்லாடி வருகிறார்கள். பால், ரொட்டிக்கு கூட அவர்கள் தவியாய், தவித்து வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை சமீபத்தில் இந்தியாவிடம் கடனுதவி கேட்டது. இதையடுத்து இலங்கைக்கு இந்தியா ரூ. 7500 கோடியை கடன் வழங்கியது.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு நன்றி என்றும் பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்திலும் இந்தியா நல்லுறவை நல்கும் என நம்புவதாகவும் இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்..
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருங்கடி – ராஜபக்சே குடும்பத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்