லேடி கேங்ஸ்டராக நடிக்கும் சரண்யா
3/24/2022 12:20:13 PM
நாயகன் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சரண்யா பொன்வண்ணன், அதன்பிறகு ஏராளமான படங்களில் அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்து விட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
இந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் லேடி கேங்ஸ்டராக நடித்து வருகிறார்.
இதனை விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்குகிறார் இவர் பிரபுதேவா நடிக்கும் ஊமைவிழிகள் படத்தின் ஒளிப்பதிவாளர். சரண்யா நடிப்பது குறித்து விஷ்ணு ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழ் சினிமாவில் அம்மா நடிகையாக மாறிப்போனவர் சரண்யா. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும் ஸ்டீரியோடைப்பை உடைக்க விரும்பினேன், அதனால்தான் நான் அந்த கதாபாத்திரத்திற்காக சரண்யா மேடத்தை அணுகினேன்.
முதலில் கேங்ஸ்டராக நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் சண்டை காட்சிகள் அதிகம் இருந்து. இந்தக் காட்சிகள் தனது இமேஜுக்கு செட் ஆகுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். சீரியஸான கேங்க்ஸ்டர் படம் என்றாலும் குடும்பம் சென்டிமெண்ட் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும். என்கிறார்.