ஒரு சிலர் அந்த குறுஞ்செய்தியை கண்டும் காணாமலும் சென்றிருப்பீர்கள். அதே நேரத்தில் சபலபுத்தி கொண்ட இளைஞர்கள் பலர் குறுஞ்செய்தியில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசி மசாஜ் கும்பல் விரித்த காம வலையில் விழுந்து மீள முடியாமல் தவிக்கும் நிலையிலேயே உள்ளனர்.
2 பெண்கள் நம் உடலில் எண்ணையை தடவி மசாஜ் செய்தால் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் மிதந்தபடியே குறிப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு பேசிய வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கி வருபவர் ஆவார்.
பெண்கள் விஷயத்தில் அப்படியும் இப்படியுமாக இருக்கும் அவரது செல்போனுக்கு வந்த மசாஜ் குறுஞ்செய்தி அவரை குஷியில் ஆழ்த்தியது. இதையடுத்து போன் செய்து பேசிய வாலிபரிடம் எதிர்முனையில் ஆண் ஒருவரே பேசினார்.
மசாஜ் சென்டரில் 2 பெண்களும் எப்படி மசாஜ் செய்வார்கள்? என்கிற விவரத்தை போனில் கேட்டதும்… அந்த சுகத்தையும் அனுபவித்து பார்த்து விட வேண்டும் என்கிற ஆசையில் மசாஜ் சென்டரில் நுழைந்தார் அந்த வாலிபர்.
மசாஜ் சென்டர் வாசலில் வைத்து முதலில் சில ஆயிரங்களை வாங்கிய நபர் வாலிபரை உள்ளே அனுப்பி வைத்தார். உள்ளம் படபடக்க மிகுந்த உற்சாகத்துடன் மசாஜ் சென்டருக்குள் புகுந்த வாலிபரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று 2 பெண்கள் மசாஜ் செய்ய தொடங்கினர்.
உடல் முழுவதும் எண்ணையை தடவி உடல் வலியை போக்கும் விதத்தில் மசாஜ் செய்த பெண்கள் இறுதியில் ‘காமப் பிடி’ ஒன்றை பிடித்து மசாஜை முடித்து வைத்துள்ளனர்.
“யப்பா…. கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லை” என்று எண்ணியபடியே தனது ஆடைகளை உடுத்த சென்ற வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீங்கள் வாசலில் கொடுத்தது அட்வான்ஸ்தான் என்று கூறி மேலும் சில ஆயிரங்களையும் மசாஜ் சென்டரில் இருந்தவர்கள் பறித்துக் கொண்ட பின்னரே திருப்பி அனுப்பியுள்ளனர்.
இப்படி மசாஜ் ஆசையில் ஒவ்வொரு மாதமும் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.
மசாஜ் சென்டருக்கு சென்று பணத்தை பறி கொடுப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புகார் எதையும் கொடுக்காமல் “நமக்கெதுக்கு வம்பு” என்று அமைதியாக இருந்து விடுகிறார்கள்.
அதே நேரத்தில் இதுபோன்று ஒருமுறை சுகம் கண்ட வாலிபர்கள் பலர், பின்னர் மசாஜ் போதைக்கும் அடிமையாகி விடுகிறார்கள். இதுபோன்ற மசாஜ் சென்டர்களை கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், இருப்பினும் புதிது புதிதாக மசாஜ் சென்டர்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
ஒருமுறை சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவருக்கே மசாஜ் குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் ஆளை அனுப்பி விசாரித்ததில் அங்கு மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றதும் தெரிய வந்தது. அங்கிருந்த 2 வட மாநில பெண்கள், 3 தமிழ் பெண்கள் ஆகியோர் மீட்கப்பட்டனர்.
சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் இந்த ஆயில் மசாஜ் மாய வலையில் விழுந்து கிடக்கிறார்கள் என்றும் சட்ட விரோத மசாஜ் சென்டர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் செல்போனுக்கு ஆயில் மசாஜ் ‘மெசேஜ்’ வந்துள்ளதா? தீர விசாரித்த பிறகே உள்ளே நுழையுங்கள். இல்லையென்றால் உங்கள் ‘மணிபர்ஸ்’ காலியாவதை தடுக்க முடியாது. உஷார்…. உஷார்…
இதையும் படியுங்கள்…ஓடும் பஸ்சில் பீர் குடித்து கும்மாளமிட்ட மாணவிகள்- கல்வித்துறை விசாரணை