விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை சிறையில் மணம் முடித்தார் அவரது காதலி….

லண்டன்: இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அவரது காதலியும் வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிஸ் பெல்மார்ஜ் சிறையினுள் திருமணம் செய்துகொண்டார்.

உலக நாடுகளில் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது ‘விக்கிலீக்ஸ்’ என்ற செய்தி நிறுவனம். இதன்முலம் அதன் நிறுவனராக இருந்த ஆஸ்திரே லியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே பிரபலமானார். அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். அதே வளையில், தங்களது நாட்டு ரகசியங்களை வெளியிட்டதற்காக அவரை அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் அவரை கைது செய்ய துடித்தன. ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதைடுத்து, தலைமறைவான அசாஞ்சே பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையில்,   ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அசாஞ்சே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில், அவர் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார். 7 ஆண்டுகளாக அவர் அங்கு தலைமறைவாக தங்கியிருந்த நிலையில், அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை ஈக்வடார் நாடு திரும்பப்பெற்றது. இதையடுத்து, லண்டன் போலீஸார் ஜூலியன் அசாஞ்சேவை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கைது செய்து, லண்டன் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் வழக்குகள் காரணமாக, அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர். ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் அசாஞ்சே, 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார்.

தற்போது 50 வயதான ஜூலியன் அசாஞ்சேவுக்கு 2011ம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருக்கும்போது, அவரது வழக்கறிஞர் ஸ்டெல்லா மோரிஸ் (37) என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த  10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் இணைந்த வாழ்ந்து வந்தனர். இதனால், அவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது.

இந்த நிலையில், அவர்கள் நேற்று (2022, ஏப்ரல் 23ந்தேதி) லண்டனையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக தங்களது திருமணத்துக்கு அனுமதி கேட்டு கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், சிறையில் உள்ள ஜூலியன் அசாஞ்ச், ஸ்டெல்லா மோரிஸை இரண்டு சாட்சிகள் மற்றும் இரண்டு காவலர்கள் என நான்கு விருந்தினர்களுடன் ஸ்டெல்லா மோரிஸ் திருமணம் செய்து கொண்டார்.

தனது திருமணம் குறித்து சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறிய மோரிஸ்,  “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். நான் ஜூலியனை முழு மனதுடன் நேசிக்கிறேன், அவர் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

தனது திருமண  நிகழ்விற்காக, மோரிஸ் இளஞ்சிவப்பு நிற சாடின் திருமண ஆடையையும், அசாஞ்சே ஒரு கில்ட்டையும் அணிந்திருந்தார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.