வேதாரண்யம் அருகே மணியன்தீவு கடற்கரையின் சேற்றுப்பகுதியில் 7 அடி நீளமுள்ள டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
மீனவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் டால்பின் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த டால்பின் மீன்கள் வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாகை மாவட்ட கடற்பகுதியில் தென்படும். இந்த நிலையில் மணியன்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கல வகையைச் சேர்ந்த டால்பின் மீன் சேற்றுப்பகுதியில் கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய இந்த டால்பின் 7 அடி நீளமும், 400 கிலோ எடையுடையதாக இருந்தது. இந்த டால்பின் மீன் கப்பல் அல்லது படகுகளின் புரோபல்லரிலோவில் அடிபட்டு இறந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இறந்த டால்பின் மீனை கோடியக்கரை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM