பத்து நிமிடத்தில் உணவு விநியோகிக்கும் புதிய திட்டம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஜோமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோமேட்டோ நிறுவனர் தீப்பந்தர் கோயல் அவரது சமூகவலைத்தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, வாடிக்கையாளர்களின் தேவையை உடனடியாக இன்றைய பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது அவர் காத்திருக்க தயாராக இல்லை இந்த உண்மையை உணர்ந்து பத்து நிமிடத்தில் உடனடியாக உணவு சேவை விரைவில் துவங்க உள்ளோம் என பதிவிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சென்னை பெங்களூர் ஹைதராபாத் போன்ற போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரங்களுக்கு மத்தியில் ஜொமேட்டோ ஊழியர்கள் ஊழியர்கள் வேகமான சென்று விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் சென்னையில் பத்து நிமிடத்தில் உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீற வாய்ப்புள்ளதால் அவர்களிடம் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.