தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இரண்டாவது நாளாக இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் சமீபத்திய உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 3500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது.
இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன?
இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!
தங்கத்தின் விலையினை தொடந்து கடந்த சில அமர்வுகளாக அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. இது 1950 – 1890 என்ற லெவலியே காணப்படுகின்றது.ஆக இந்த லெவலில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்தால், பெரியளவில் மாற்றம் காணலாம். இதில் 1950 டாலர்கள் எண்ற லெவலை உடைப்பது போலவே சந்தையானது காணப்படுகின்றது.
நீளும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், கிட்டதட்ட ஒரு மாதத்தினையும் எட்டியுள்ளது.இதில் பல ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். பொதுமக்களும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை அதிகரித்துள்ளது.
பணவீக்கம் Vs தங்கம்
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது பணவீக்கத்தினை மீண்டும் அதிக்க வழிவகுக்கலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள்
சர்வதேச பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதன் தாக்கம் தங்கம் விலையில் அதிகரித்துள்ளது. பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
ஆக நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது, ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இரண்டு நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிக்கல் என்ன சொல்கிறது?
சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில், என அனைத்தும் தங்கம் விலை சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால் நோக்கிலும் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு ரஷ்யா மீது அதிகரித்து வரும் தடைகளால், கமாடிட்டிகளின் விலையானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து, 1939.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது.எப்படியிருப்பினும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.247 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 41 ரூபாய் அதிகரித்து, 51,808 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 6 ரூபாய் குறைந்து, 68,258 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 4831 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 38,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 54 ரூபாய் அதிகரித்து, 5270 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து, 42160 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.90 பைசா அதிகரித்து, 72.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 728 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 72,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on march 24th 2022: gold price today up for 2nd day in a row but down Rs.3500 from latest high
gold price on march 24th 2022: gold price today up for 2nd day in a row but down Rs.3500 from latest high / 2வது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை.. ஆனால் உச்சத்தில் ரூ.3500 சரிவு தான்..!