உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவை சிறை பிடிக்க ரஷ்யாவை எதிர்க்கும் மேற்கத்திய நாடுகள் திட்டம் தீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
புட்டினின் ‘ரகசிய’ குழந்தைகளுடன் அலினா கபேவா சுவட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை கண்டறிவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அல்தாய் மலைகளில் அமைந்துள்ள ஒரு சொகுசு மாளிகையில் இருப்பதாக மனுவில் கூறப்படுள்ளது.
மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை… ஆனால்… எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா..!!
அலினா கபேவா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
கபேவா 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸிற்கான ஆல்ரவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். சிட்னி 2000 ஒலிம்பிக்கில், அவர் வெண்கலம் வென்றார். இவர் உடலை வில்லாக வளைக்கும் திறன் பெற்றவர்.
(Pic courtesy: AP)
38 வயதான கபீவா முன்னாள் கால்பந்து வீரர் மராட் கபாயேவின் மகள். அவர் 1983 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் உள்ள உஸ்பெக் SSR-ல் உள்ள தாஷ்கண்டில் பிறந்தார்.
கபேவாவும் புடினும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவை சேர்ந்த பல முக்கிய நிறுவனங்கள் கபேவா குடும்பத்திற்கு பணம் மற்றும் சொத்துக்கள் உட்பட பல பரிசுகளை வழங்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியானது. புடினால் சிறையில் அடைக்கப்பட்ட , எதிர் கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ஏற்படுத்திய ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Pic Courtesy: Twitter
புடினின் ரகசிய காதலி என கூறப்படும் கபேவா, புடினின் ‘ரகசிய’ குழந்தைகளின் தாய் என்றும், அவருக்கும் புதினுக்கும் பல குழந்தைகள் இருப்பதாகவும் ,ஆனால், ரஷ்ய அதிபர் அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றும் தொடர்ந்து உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகி வருகின்றன
Pic Courtesy: Twitter
அரசு சார்பு தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் நிறுவனம் எனக் கூறப்படும் நேஷனல் மீடியா குழுமத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருக்கும் கபேவா சுமார் $10 மில்லியன் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல்களும் முன்னதாக வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்