Apple-க்கு மாற்று நாங்க தான்… கெத்தா அறிமுகமான Nothing போன்!

சிலர் மட்டும் ஆட்சி செய்யும் இடத்தில், அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கும். அதேபோல் தான் ஸ்மார்ட்போன் மார்கெட்டும். தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் கேட்ஜெட்டுகளை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதில், புதிதாக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.

ஆனால், தயாரிப்பின் அடுத்த நிலையான கண்டுபிடிப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு, மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களை சிந்திக்க விடாமல், தொடர்ந்து புதுபுது போன்களை டெக் சந்தையில் அறிமுகம் செய்வதே காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Apple, Samsung, Xiaomi போன்ற முன்னணி நிறுவனங்கள் எந்த ஸ்மார்ட்போனை வெளியிட்டாலும், கண்ணை மூடிக் கொண்டு வாங்கும் சூழல் பயனர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அம்சங்களை ஆய்வுக்குட்படுத்தும் சில டெக் பிரியர்கள் மட்டும், புதுமையான கண்டுபிடிப்புகள், மக்களுக்குத் தேவையான அம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு போன்றவற்றுடன், ஒரு பிராண்டு எப்போது ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் எனக் காத்திருந்தனர்.

Nothing Event: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா ‘Naked’ பிராண்ட்!
நத்திங் நிகழ்வு

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஆப்பிள் போன்களுக்கு மாற்று நாங்கள் தான் என மொபைல் சந்தையில் தடம்பதித்துள்ளது ‘நத்திங்’ நிறுவனம். ஒரே ஒரு நேக்கட் டிசைன் ப்ளூடூத் இயர்பட்ஸை மட்டும் டெக் சந்தையில் அறிமுகப்படுத்தி, பார்வையாளர்களை தங்கள் வசம் ஈர்த்திருந்தது நத்திங்.

இந்த சூழலில், நத்திங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் வரவுக்காக பயனர்கள் காத்திருந்தனர். இவர்களின் புதிய தயாரிப்புகள் குறித்து பல எதிர்பார்ப்புகளும் இணையத்தில் கசிந்து வந்தன. அனைத்தையும் மெய்ப்பிக்கும் விதமாக நத்திங் தனது புதிய
Nothing Phone 1
ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நேரலை நிகழ்வில் அறிவித்தது.

இதில் பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்
Carl Pei
, “ஸ்மார்ட்போன் சந்தை அபார வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், அவைகள் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. என் எதிர்பார்ப்பு என்பது பயனர்களுடையது. அவர்கள் விரும்பும் புதிய கண்டுபிடிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு AC – அதிரடி தள்ளுபடியில் சிறந்த ஸ்மார்ட் Inverter ஏசிக்கள்!

எண்ணங்களை மாற்றும் ‘நத்திங்’

இந்த நிலையை மாற்ற தான் Nothing பிராண்ட் உருவாக்கப்பட்டது. நல்ல போன்களை வெளியிடும் பிராண்டுகள் என ஒரு சிலதை மட்டுமே நுகர்வோர்கள் மனதில் வைத்துள்ளனர். ஆனால், அந்த பிராண்டுகள் பயனர்களுக்காக புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. சில மாற்றங்களை மட்டுமே செய்து, புதிய ஸ்மார்ட்போன் என்று தங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துகின்றனர்.

இந்த நிலையை நத்திங் நிறுவனம் மாற்றும். நம் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான Nothing Phone 1 விரைவில் சந்தைக்கு கொண்டுவரப்படும். அது ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இதற்காக
Android
அடிப்படையிலான
Nothing OS
இயங்குதளத்தை நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நத்திங் தவிர்த்து வேறு சில ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த இயங்குதள பதிப்பு வழங்கப்படும். மிகவும் இலகுவான, பேட்டரியை அதிகம் உறிஞ்சாத, அனைத்து வகையிலான பயன்பாடுகளையும் உள்ளடக்கியதாக இந்த இயங்குதள ஸ்கின் இருக்கும்.

பயனர்களுக்கான ஸ்மார்ட்போன்

மேலும், ஸ்னாப்டிராகன் உடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். Nothing Phone 1 டெக் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களுக்கு தேவையற்ற எதுவும் அதில் நிறுவப்படாது. அதேவேளையில், தேவையான அனைத்தும் நத்திங் ஸ்மார்ட்போனில் இடம்பெறும். 3 வருட OS அப்டேட்ஸ், 4 வருட Security Patch அப்டேட்ஸ் வழங்கப்படும்.

கோடை காலத்தில் குளிர்ச்சியான செய்தியாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு தேதி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். எங்களின் தயாரிப்புகள் அனைத்தும் உங்களுக்கானது. நேர்த்தியான தயாரிப்புகள் மூலம் தேவையான லாபத்தை ஈட்டுவதே எங்களின் நோக்கம்.

OnePlus வெளியிடப்போகும் 6 ஸ்மார்ட்போன்கள் – கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்!

சந்தையில் டிரெண்டிங்கில் இருக்கும் அம்சங்களைக் கொண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டுவருவது எங்களின் நோக்கம் அல்ல. பெஸ்ட் என்றால் Apple iPhone தான் என்ற நிலை விரைவில் மாறும். அதற்கான முதற்படி தான் Nothing Phone 1 Smartphone” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.