பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக சர்ரபேரவையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாலிடெக்னிக் ஐஐடியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய திட்டம் என்பது பொருந்தும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி செல்லக்கூடிய மாணவிகளுக்கு, அவர்களுடைய உயர் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இடைநிற்றலை தடுக்க கூடிய வகையிலும், தமிழக அரசினுடைய உயர் கல்வி துறையை உயர்த்தும் வகையில், திட்டமாக மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்க கூடிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு நேரடியாக பாலிடெக்னிக் அல்லது ஐடிஐ செல்லக்கூடிய மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்துமா? பொருந்தாதா? என்ற கேள்வியும், சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக முதலாமாண்டு சேர்ந்தாலும் கூட, அந்த மாணவிகளுக்கு, அவர்கள் படிக்கக்கூடிய ஆண்டுகளில் மாதம்தோறும் ரூபாய் நிதி உதவி திட்டம் பொருந்தும் என்று தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.