ஐ.பி.எல் ஆல்-டைம் 11-ன் பேட்டிங் ஆர்டரை முந்தைய பகுதியில் பார்த்திருப்போம். ஒப்பனர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி, ஒன்-டவுன் பொஷிஷனில் சந்தேகமே இல்லாமல் Mr.IPL சுரேஷ் ரெய்னா, அதற்கடுத்து ரோஹித் ஷர்மா, ஐந்தாவது இடத்தில் எம்.எஸ்.தோனி, ஆறாவது இடத்தில் மிக சிறந்த 3-டி வீரராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வரும் ரவீந்திர ஜடேஜா.
இப்போது ஏழாவது இடத்திற்கான தேர்வு. போட்டியில் இருப்பவர்கள் இருவருமே மேற்கிந்திய வீரர்கள். ஒருவர் சென்னை அணியின் டுவைன் பிராவோ மற்றொருவர் மும்பை அணியின் கைரன் பொல்லார்ட். இருவருமே தங்களது அணிகளின் தவிர்க்கமுடியாத வீரர்கள். பொல்லார்ட் எந்த நேரத்திலும் கியரை மாற்றி எத்தனை பெரிய ஸ்கோரையும் சேஸ் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்.
ப்ராவோவை பொறுத்தவரையில் பேட்டிங்கில் தேவையான பல தருணங்களில் அணியைக் கரை சேர்த்தாலும் பௌலிங்கில் அவர் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அளப்பரியது. ஸ்லோயர் பால் என்னும் வித்தையின் மூலம் எந்த பேட்டரையும் ஏமாற்றி விடும் இவர் ஐ.பி.எல் அரங்கில் 167 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பௌலிங் ஆல்-ரவுண்டர் என்று முடிவு செய்யப்பட்டால் பிராவோவே அணியில் ஆடுவார். இதே பேட்டிங் பக்கம் கொஞ்சம் சாய்ந்தால் பொல்லார்டிற்கே வாய்ப்பு அதிகம். இப்படி இருவருக்கிடையில் பலத்த போட்டி நிகழ்ந்து கொண்டிருக்க அது நீண்ட நேரம் ஆகியும் நீங்கியபாடில்லை.
சரி, மற்ற மூவரைத் தேர்ந்தெடுத்து விட்டு காம்பினேஷன் படி இவர்களில் ஒருவரை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து அணியைக் கட்டமைத்தால் பலம் பொருந்திய இந்த இரு வீரர்களுக்கும் இடமில்லை. பொல்லார்ட், பிராவோ இருவருமே இல்லாத ஒரு ஆல்-டைம் 11 எப்படிச் சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான காரணம் என்ன? அவர்களுக்கு பதில் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் யார் என்பதையெல்லாம் கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.