Tamil News Today Live: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை  நடவடிக்கை!

Petrol and Diesel Price: இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு, கடந்த இரு நாட்களும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. அதனால் இன்றும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 காசுகளுக்கும், டீசல் ரூ.92.95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்!

முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று மாலை துபாய் செல்கிறார். துபாய் உலகக் கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை நாளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முன்னணி தொழில் முனைவோர்களையும் முதல்வர் சந்திக்க உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது  என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu News LIVE Updates:

16 தமிழக மீனவர்கள் கைது!

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது.

மான்களின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் காரணமில்லை!

சென்னை ஐஐடி வளாகத்தில் 3 மான்களின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் நோய் காரணமில்லை. மான்களின் ரத்தம் மற்றும் சதை மாதிரிகளில் ஆந்த்ராக்ஸ் கிருமியின் தொற்று ஏதுமில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையினர் சோதனை!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஹீரோ மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பவன் மஞ்சலின் அலுவலகம், வீடு உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Live Updates
09:07 (IST) 24 Mar 2022
வெள்ளை புலி உயிரிழப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில்13 வயது வெள்ளை புலி ‘ஆகான்ஷா’ உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

09:06 (IST) 24 Mar 2022
ஜம்மு – காஷ்மீர் பிரச்சினை.. இந்தியா திட்டவட்டம்!

ஜம்மு – காஷ்மீர் பிரச்சினை முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம். பொது பேச்சுகளை சீனா தவிர்க்க வேண்டும் என இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

09:06 (IST) 24 Mar 2022
லாலு பிரசாத் உடல் நிலை மோசம்!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

09:06 (IST) 24 Mar 2022
உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்புகள் திட்டம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க, நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உலகளாவிய போராட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

08:27 (IST) 24 Mar 2022
மோடி, பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சந்திக்க உள்ளார்.

08:27 (IST) 24 Mar 2022
320 செல்போன் செயலிகள் முடக்கம்!

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இதுவரை 320 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

08:27 (IST) 24 Mar 2022
இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடுகள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 443 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர ரூ. 19.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

08:26 (IST) 24 Mar 2022
கூடுதல் கடனை விரைவாக வழங்க வேண்டும்!

மத்திய அரசின் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனை விரைவாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.