அடங்காத வடகொரியா.! மீண்டும் ஆபத்தான ஏவுகணை சோதனை

உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை செய்துவருகிறது. அடிக்கடி புதிய ஏவுகணையை தயாரித்து அதை ஜப்பான் கடல்பரப்பில் சோதனை செய்து வருவது வடகொரியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் கடும் கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றன. வடகொரியாவின் செயல் மிகவும் கவலை தருவதாக ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா தெரிவித்து வருகிறார். தடை செய்யப்பட்ட அணுஆயுத ஏவுகணைகள் பரிசோதனையை வட கொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் அறிக்கை மூலம் வேறு கோரிக்கை விடுத்திருந்தன. இதை எதையும் பொருட்படுத்தாமல் ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா, தற்போது உலகின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. ஆய்வாளர்களால் இந்த ஏவுகணை ‘மான்ஸ்டர் ஏவுகணை’ என அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை வடகொரியாவே உறுதிப்படுத்தியிருக்கிறது. Hwasong-17 எனப்படும் உலகின் மாபெரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அக்டோபர் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டு, வடகொரிய ராணுவ அணிவகுப்பிலும் இடம்பெற்றது. அப்போதே, இது எப்போதுவேண்டுமானாலும் சோதனை செய்யப்படும் என்று உலக நாடுகள் எச்சரித்தது. தற்போது அந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியும் காட்டிருக்கிறது வடகொரியா. 

மேலும் படிக்க | வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?

இருதினங்களுக்கு முன்பு ஊகிக்க முடியாத ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து இருப்பதாக தென்கொரியா குற்றம்சாட்டியிருந்தது. அந்த ஏவுகணை, 2017 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட Hwasong-15 ரக ஏவுகணையைவிட பெரியது என்றும், அணு ஆயுதப் போருக்கான நீண்ட தூர சோதனை போல் இருப்பதாகவும் தென்கொரியா சந்தேகம் தெரிவித்திருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாகவே உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி Hwasong-17 என்ற மாபெரும் கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது அமெரிக்காவில் எந்த இடத்தையும் அடையும் பொருட்டு மிகத்துல்லியமாக தாக்கும் அளவுக்கு திறன் படைத்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த ஏவுகணை வடகொரியாவின் பாதுகாப்புக்கு “தேவையான தடுப்பாக” பார்க்கப்படுவதாகவும், ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போதும் அணுஆயுத சோதனைக்கு இந்த ஆட்சி முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் விளக்கம் அளித்துள்ளன. வடகொரியாவின் இந்த அடாவடி செயலால் மீண்டும் தீபகற்பகத்தில் பதட்டம் நிலவி வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.