பியாங்யாங்,
வடகொரியா சமீபத்தில் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதுகுறித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில்,
இந்த ஏவுகணை சோதனை, வடகொரியாவின் அணுசக்தி வலிமையை நிரூபிக்கவும், அமெரிக்க ராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காகவும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்த ஏவுகளை வடகொரியாவின் முந்தைய தயாரிப்புகளை விட அதிக உயரம் மற்றும் தொலைவுகள் சென்று தாக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அமெரிக்காவின் எந்த ஒரு ராணுவ முயற்சிகளையும் கட்டுப்படுத்த தயாராக உள்ளதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.