புதுடெல்லி:
மக்களவையில் இன்று நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் பேசியதாவது:-
அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும். அம்பேத்கர் பவுண்டேசனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சமூக நீதியை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றால் அம்பேத்கர் பவுண்டேசன் இயங்க வேண்டும்.
பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை தீர்மானித்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
சமூகநீதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தற்போது குறைக்கப் பட்டிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் செய்வோருக்குத் தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.