அரிசி விற்பனையில் இறங்கும் அதானி.. ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்..!

இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனமான வளர்ந்திருக்கும் அதானி வில்மார் புதிதாகச் சமையல் எண்ணெய் உட்படப் பல பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மக்கள் தினசரி பயன்படுத்தும் உணவு பொருட்கள் பிரிவில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.

இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!

இதன் வாயிலாக வருகிறது ஏப்ரல் மாதம் அரிசி விற்பனை செய்யப் புதிதாக ஒரு பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

அதானி வில்மார்

அதானி வில்மார்

அதானி வில்மார் நிறுவனம் தனது அரிசி விற்பனையை ஆரம்பம் முதல் வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள மாநில அளவிலான அரிசி பிராண்டுகளையும், ரைஸ் மில்களையும் கைப்பற்றுவதற்காக முயற்சியில் இறங்கியுள்ளது.

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

இந்நிலையில் ஏப்ரல் மாதம் மேற்கு வங்காளத்தில் இருந்து தனது புதிய அரிசி பிராண்டை அறிமுகம் செய்து விற்பனையைத் துவங்க உள்ளதாக அதானி வில்மார் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக மேற்கு வங்காளத்தில் திவாலான, இயங்க முடியாத சில ரைஸ் மில்களைக் கைப்பற்றியுள்ளது அதானி வில்மார்.

 மேற்கு வாங்களம்
 

மேற்கு வாங்களம்

பொது விநியோக உணவு தானியங்களைத் தாண்டி தினசரி மக்கள் பயன்படுத்தும் அரிசி ஆண்டுக்கு 30-35 மில்லியன் டன்கள் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த வேகமாக வளரும் பிரிவில் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கு வங்காளத்தில் சில ரைஸ் மில்களைக் கைப்பற்றி வர்த்தகத்தைத் துவங்க உள்ளோம் என அதானி வில்மர் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் அங்ஷு மல்லிக் கூறியுள்ளார்.

பாஸ்மதி அரிசி

பாஸ்மதி அரிசி

அதானி வில்மார் ஏற்கனவே பாஸ்மதி அரிசி பிரிவில் வர்த்தகம் செய்து வருகிறது. ஆனால் இது மொத்த அரிசி நுகர்வில் 10 சதவிகிதம் மட்டுமே, எனவே தினசரி நுகர்வுக்குப் பயன்படுத்தப்படும் பிராந்திய வகை அரிசியை விற்பனை செய்யப் புதிய பிராண்டை தனது பார்சூன் பிரிவின் கீழ் அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Wilmar entering into rice selling, New brand announcement in April

Adani Wilmar entering into rice selling, New brand announcement in April அரிசி விற்பனையில் இறங்கும் அதானி.. ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.