இந்தியாவில் கொரோனா பாதிப்பு – சற்று குறைந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா வைரசுபாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,938-ஐ விட சற்று  அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 499 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 087 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.