இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து ஆயிரத்து 685 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 83 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 24 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 21 ஆயிரத்து 530 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.