இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 21-ந்தேதி பாதிப்பு 1,549 ஆக இருந்தது. மறுநாள் 1,581, நேற்று முன்தினம் 1,778, நேற்று 1,938 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 83 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 74 அடங்கும். இதனால் மொத்தபலி எண்ணிக்கை 5,16,755 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,499 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 21,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 897 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 29,82,451 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 182 கோடியே 55 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 78.56 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 6,91,425 மாதிரிகள் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.