இந்திய கடற்படைக்கப்பலான ஷர்தா, நவீன இலகு ரக ஹெலிகொப்டருடன் 2022 மார்ச் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
2. ரோந்து கப்பலான ஷர்தாவின் கட்டளை அதிகாரியான தளபதி யதீஷ் பதௌதியா அவர்கள் மேற்கு கடற் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் ஏ.யு.சி டி சில்வா அவர்களை இந்த விஜயத்தின்போது சந்தித்திருந்தார். அத்துடன் இக்கப்பலில் 2022 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இந்திய அரசின் நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் இலங்கை கடற்படையின் சாகர கப்பலுக்காக வழங்கப்பட்ட உதிரிப்பாகங்களை ரியர் அட்மிரல் ஏ.யு.சி டி சில்வா அவர்களிடம் பிரதி உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்கள் கையளித்திருந்தார். உரிய நேரத்தில் வழங்கப்பட்ட இந்த உதிரிப்பாகங்கள் இலங்கை கடற்படையின் செயற்திறனை உறுதிப்படுத்தும்.
3. மேலும், சிசெல்ஸ் பாதுகாப்பு படையினருக்காக இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட 10 தொன்கள் நிறையுடைய அலை சவாரி படகொன்றும் இக்கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதுடன் சிசெல்ஸுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்திய கடற்படையின் முயற்சிகள் அனைத்தும் “நட்புறவுப் பாலங்கள்” என்ற கொள்கையின் அடிப்படையில் அயலில் உள்ள நட்பு நாடுகளுடன் உறவினை வலுவாக்குவதனை நோக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு
25 மார்ச் 2022