அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 கூட்டமைப்பு சார்பில், ரஷ்யா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நாளுக்கு நாள் இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமானது அதிகரித்து வரும் நிலையில், பல கட்டமாக இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தும், இதுவரையில் சுமூக நிலை ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில் தான் பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல தடைகளை விதித்து வருகின்றன.
இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!
உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
குறிப்பாக ரஷ்யாவின் அடிப்படை பொருளாதார ஆதாரமான எண்ணெய் வணிகத்திலேயே பல நாடுகளும் கை வைத்துள்ளன. கச்சா எண்ணெய் மீதான தடைக்கு மத்தியில் தான், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியது. தற்போது சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் உச்சத்திலேயே காணப்படுகிறது.
தங்கம் இருப்பு அதிகரிப்பு
ரஷ்யாவின் மத்திய வங்கியானது 2000 ஆண்டிற்கு பிறகு தங்கத்தின் இருப்பினை கணிசமாக உயர்த்தியுள்ளது. உலக நாடுகள் தற்போது ரஷ்யா மீது தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் கரன்சி எனவே மிகப்பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது. இதனால் ரூபிளின் மதிப்பை மேம்படுத்த, தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் ஈடுகட்ட முடியும் என ரஷ்ய மத்திய வங்கி நினைக்கிறது.
புதிய சுற்று தடை
மொத்தத்தில் வீழ்ச்சி கண்டு வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தங்கத்தை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜி7 நாடுகள் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிவர்த்தனைகளில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, ரஷ்யாவில் ஸ்டேட் டுமா கொண்டுள்ளது. இவர்களை குறி வைத்து புதிய சுற்று தடைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்கத்தின் இருப்பு
ரஷ்யாவின் பல ஆண்டுகளாகவே தங்கத்தினை குவித்து வருகின்றன. இதன் மதிப்பு தோராயமாக 130 மில்லியன் டாலர் ஆகும். இதற்கிடையில் பிப்ரவரி 28 அன்று உள்நாட்டில் தங்கம் வாங்குவதை மீண்டும் தொடங்குவதாக ரஷ்யாவின் மத்திய வங்கியானது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் மத்திய வங்கியானது தங்கத்தினை பயன்படுத்த கூடாது என்ற தடையானது மேலும் ரஷ்யாவுக்கு பாதுப்பினை ஏற்படுத்தலாம்.
பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தடை
இதற்கிடையில் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும், உக்ரைனுக்கு எதிரான போருக்கு அதற்கு நிதி அளிப்பதற்கும் சர்வதேச இருப்புகளை பயன்படுத்துவதற்கான முழு திறனையும் மழுங்கடிக்கும் என்றும் கூறியிருந்தனர். தற்போது 48 பாதுகாப்பு நிறுவனங்கள், ஸ்டேட் டுமாவில் உள்ள 328 உறுப்பினர்களையும் குறிவைத்து கூடுதல் தடைகளை அறிவித்துள்ளது.
G7 countries restricting Russian central bank’s use of gold
G7 countries restricting Russian central bank’s use of gold/இனி தங்கமே இருந்தாலும் பெரிய பயன் இல்லை.. ரஷ்யாவுக்கு செக் வைத்த ஜி7 நாடுகள்..!