உக்ரைன் டூ ருமேனியா… நான்கு நாட்கள் பயணித்து உயிர்தப்பிய சிங்கம்!

உக்ரைன் மீது ரஷியா நிகழ்த்திவரும் தொடர் தாக்குதலால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள் என தஞ்சம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் -ரஷியா போரால் மக்கள் மட்டுமின்றி அங்கு விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவைகள் உணவின்றி தவித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைனில் பிரபலமான ஜிபோரிஜியாவில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோன்று அனகலா என்று பெயரிடப்பட்ட ஓநாயையும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விலங்குகள் நல அமைப்பு மேற்கொண்டது.

விமானம் கேட்டோம்.. பீரங்கி கேட்டோம்.. எதையுமே தரலை.. நேட்டோ மீது பாயும் ஜெலன்ஸ்கி

இதையடுத்து சிம்பா சிங்கம் மற்றும் அனகலா ஓநாய் கூண்டுகளில் அடைக்கப்பட்டன. பின்னர் அந்த கூண்டுகள் வேனில் ஏற்றப்பட்டு ருமேனியாவுக்கு புறப்பட்டது. போர் சூழலில், நான்கு நாட்கள் ஆபத்தான பயணத்துக்கு பிறகு சிங்கம் மற்றும் ஓநாய் பாதுகாப்பாக
ருமேனியா
நாட்ைட அடைந்தன. அங்குள்ள ராடெவுட்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் தற்போது இரு விலங்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

விலங்குகளை ஏற்றி சென்ற வேன் ருமேனியாவின் சிரட் எல்லை வழியாக செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக இரு நாடுகளின் பொதுவான எல்லை வழியாக சுமார் 1000 கிலோமீட்டர் வேன் பயணிக்க வேண்டியதானது என்பதும், உயரமான கார்பாத்தியன் மலைகளை கடந்து செல்ல வேண்டியதானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி”Iron Dome”.. அதிரடியான “கேம் சேஞ்சர்”.. உக்ரைனுக்கு அனுப்புமா இஸ்ரேல்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.