Courtesy: BBCNews
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது வாரமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரின் 30-வது நாளான இன்று பதிவான முக்கிய செய்திகள் இங்கே தொகுத்து வழங்கபட்டுள்ளன.
உக்ரைனின் துறைமுக நகரமாக மரியுபோலில், அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் உக்ரைன் படைகளால் மீட்க முடிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன்-போலாந்து எல்லைக்கு செல்லவிருப்பதாகவும் அங்கு அவர் உக்ரைன் அகதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில், ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மரியுபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகளாகும் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடும், நேட்டோ உறுப்பினர் நாடான போலந்து மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னாள் நேட்டோ தளபதி தெரிவித்துள்ளார்.
(Reuters: Alexander Ermochenko)
ரஷ்யா உக்ரைன் மீது வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ “எதிர்வினையாற்றும்” என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எவ்வாறு அதற்கு எதிர்வினையாற்றும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய நாடுகள் தாமதமாக எதிர்வினையாற்றியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.