லக்னோ: உத்திரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். பதவியேற்பு விழா நடக்கும் மைதானத்தில் இருந்துதான் யோகி ஆதித்யநாத் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.
