Courtesy: DW
ஜேர்மனியில் அதிக எரிசக்தி விலைகளை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் உள்ள மக்கள் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பினால் அதிகரித்த எரிசக்தி செலவினங்களை சமாளிக்க உதவும் தற்காலிக நடவடிக்கைகளுக்கு ஜேர்மன் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் 300 யூரோ மதிப்பில் ஒரு முறை எரிசக்தி வரி நிவாரணம் செலுத்துதல், எரிபொருளுக்கான வரியில் மூன்று மாதக் குறைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான மாதாந்திர டிக்கெட்டுகளின் விலையில் மூன்று மாதக் குறைப்பு ஆகியவை அடங்கும்.
அதிக எரிசக்தி விலைகள் மட்டுமின்றி, அதிகரித்து வரும் பணவீக்கத்தையும் எதிர்கொள்ளும் மக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க அரசாங்கம் நம்புகிறது.
300 யூரோ போனஸ் மக்களுக்கு அவர்களின் ஊதியத்தின் மூலம் வழங்கப்படும். அதே வேளையில், சமூக நலன்களைப் பெறுபவர்கள் கூறுதலாக 100 யூரோ டாப்-அப் பெறுவார்கள்.
குழந்தைகளுக்கான உதவிதொகை மற்றும் பலன்களைப் பெறும் குடும்பங்கள், ஒரு குழந்தைக்கு 100 யூரோ கூடுதலாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PC: DW
எரிவாயு நிலையங்களில் தங்கள் வாகனங்களை நிரப்பும்போது நுகர்வோருக்கு எரிபொருளுக்கு மானியம் வழங்க, வணிக-நட்பு சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) என்ற கூட்டணியின் உறுப்பினர் ஒருவரின் முன்மொழிவு, மற்ற கூட்டணி பங்காளிகளான சமூக ஜனநாயகவாதிகள் (SPD) மற்றும் பசுமைவாதிகளால் நிராகரிக்கப்பட்டது.
தனியார் கார்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான ஆதரவு
வாகனங்களுக்கான எரிபொருளுக்கான வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு 30 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு 14 காசுகளும் குறைக்கப்படும்.
மாதாந்திர டிக்கெட்டுகளுக்கான மானியங்களை “மாநிலங்கள் ஒழுங்கமைக்கும் வகையில்” பிராந்திய பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கும் அரசாங்கம் நிதியை வழங்கும் என்று பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ரிக்கார்டா லாங் கூறினார்.