தனுஷை பிரிந்த பிறகு ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கிறார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. பெரும்பாலும் தன் கெரியர் பற்றி தான் ட்வீட் போடுகிறார். இந்நிலையில் தான் சந்தோஷமாக இருப்பது குறித்து ட்வீட் செய்யத் துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் கையில் காபி கப்புடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தான் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
அதை பார்த்த ரசிகர்கள், நல்லது அக்கா, அண்ணி என தெரிவித்துள்ளனர். சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதோ,
சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். இதை நாங்க நம்ப மாட்டோம். தனுஷை பிரிவது என்று முடிவு செய்த பிறகு தேசிய விருது பெற்ற அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து #mine #proudwife என்று இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக போஸ்ட் போட்டவர் தானே நீங்கள்.
அந்த சந்தோஷம் எல்லாம் பொய் என்பது அப்பொழுது தெரியவில்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அதை இப்படி சமூக வலைதளங்களில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என தெரிவித்துள்ளனர்.
ஹீரோவாகும் தனுஷ் மகன், இயக்கும் அம்மா ஐஸ்வர்யா?
கெரியரை பொறுத்தவரை ராகவா லாரன்ஸ் படம், இரண்டு பாலிவுட் படங்களை இயக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா. இதற்கிடையே தன் மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக்கப் போகிறார் என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது.