சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற முடிந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படு வதாக சபாநாயகர் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணமாக அவை ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டம் ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் வகையில், தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக வரும் 30ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆலோசித்து கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது. துறைவாரியாக மானிய கோரிக்கை மீது எந்தெந்த தேதிகளில் விவாதம் நடத்துவது என்பது குறித்து என்று முடிவு செய்யும் என்றார்.
அத்துடன் மானிய கோரிக்கை மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக நேரலை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்றவர், தினசரி கேள்வி நேரம் நடைபெறும் என்றும் கூறினார்.