ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் இயற்கை எரிவாயுவை வாங்கி வரும் நிலையில், போரால் ஏற்பட்டுள்ள தட்டுபாட்டை ஈடுகட்ட அந்நாடுகளுக்கு கூடுதலாக இயற்கை எரிவாயு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
குளிர்காலங்களில் வீடுகளை சூடேற்றவும், சமையல், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் 40 சதவீத இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் எரிவாயு தேவைக்காக ரஷ்யாவை சார்ந்து இருப்பதை குறைக்க இந்த ஆண்டு கூடுதலாக அந்நாடுகளுக்கு ஆயிரத்து 500 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு வழங்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்த அளவை 5 ஆயிரம் கோடி கன மீட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.