`ஒன்லி வெஜ் முதல் பயோ கழிவறை வரை!' – அரசுப் பேருந்துகளை பயணவழி உணவகங்களில் நிறுத்த புதிய நிபந்தனைகள்

அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பலர், பயணத்தின்போது சாப்பிடுவதற்காக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில், உணவு, கழிப்பிட வசதி, விலை போன்றவற்றைக் குறித்துப் பல குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படும் இதுபோன்ற உணவகங்களுக்கான புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. என்னென்ன நிபந்தனைகள் என்பதைப் பின்வருமாறு காணலாம்,

அரசுப் பேருந்து
  • உணவகங்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும்.

  • கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். மேலும் பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

  • உணவக வளாகத்தில் கட்டாயம் CCTV கேமிரா பொருத்தியிருக்க வேண்டும்.

  • பேருந்தில் பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

  • உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலைப்பட்டியல் பயணிகளுக்குத் தெளிவாக இருக்கும்படி விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட வேண்டும். உணவுப் பொருள்களின் விலை, எம்.ஆர்.பி (MRP) விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

  • அனைத்து உணவகங்களிலும் கண்டிப்பாக புகார்ப்பெட்டி இடம்பெற்றிருக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.