ஒமைக்ரான் வகை கொரோனாவை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய வகை வைரஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் வைரஸ்கள், வாழ்நாள் முழுவதும் மனிதர்களுடன் இருக்கும் என கூறினார். குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்கக்கூடிய என்டமிக் என்ற நிலையை கொரோனா வைரஸ் எட்டியுள்ளது என்ற கருத்தை நிராகரித்த அவர், வைரஸ் பரவல் நிலையான கட்டத்தை எட்டியுள்ளதாக கருதுவது தவறானது என்றார்.
மேலும், இங்கிலாந்தில் கொரோனா பரவல் கணிசமான அளவில் உயரும் நிலையில், அங்கு ஒமைக்ரானின் பி.ஏ.2 வகை மாறுபாடு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதாக கிறிஸ் விட்டி கூறினார்.