கங்கனாவுக்கு பிரபலம் என்பதால் விலக்கு அளிக்க முடியாது : நீதிமன்றம் உத்தரவு

ந்தேரி, மும்பை

ங்கனா ரணாவத் பிரபலம் என்பதால் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என அந்தேரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது கிரிமினல் அவதூறு புகார் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நேற்று இவ்வழக்கு பெருநகர நீதிபதி ஆர்.ஆர்.கான் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது கங்கனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கங்கனா இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.  அவர் படப்பிடிப்பிற்காக அடிக்கடி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்வார். அவர் இவ்வாறு பயணம் செல்வதால், அவரால் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் தாமதங்கள் ஏற்படுகிறது. ஆகவே, அவரை நிரந்தரமாக ஆஜராகாமல் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

நீதிபதி ஆர்.ஆர்.கான் பிறப்பித்த உத்தரவில், :கங்கனாவை வழக்கு விசாரணைக்காக நிரந்தரமாக ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. அவ்வாறு விசாரணைக்கு நிரந்தரமாக ஆஜராகாமல் இருக்க கங்கனாவுக்கு அனுமதி அளித்தால், மூத்த குடிமகனாக இருக்கும் மனுதாரர் அக்தருக்கும் வழங்க வேண்டியது இருக்கும்.

மேலும் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். கங்கனா பிரபலமாக இருக்கலாம்; நீதிமன்றத்தை பொருத்தமட்டில் அவர் மீது வழக்கு உள்ளது. அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை மறுக்க முடியாது. எனவே, கங்கனா சட்டப்பூர்வ நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதால் அவரது மனு நிராகரிக்கப்படுகிறது.’ என்று உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.