கோடீஸ்வரர்களுக்கு எதிராக சாங்ஷன்.. எங்களை ஒன்னும் செய்யாது.. ரஷ்யா அதிரடி

ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் விதிக்கும்
பொருளாதாரத் தடை
எங்களப் பாதிக்காது என்று முன்னாள் ரஷ்ய அதிபரும் தற்போதைய ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் கூறியுள்ளார்.

ஐக்கிய ரஷ்ய கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது மெத்வதேவ் இவ்வாறு தெரிவித்தார். உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. குறிப்பாக ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ள அவர்களது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதை ரஷ்யா பொருட்படுத்தவில்லை. தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தவே செய்தது.

தற்போது சீனா மற்றும் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் இந்தத் தடையை சமாளித்து வருகிறது ரஷ்யா. இதற்கிடையே, ஐக்கிய ரஷ்யா கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு மெத்வதேவ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மேற்கத்திய நாடுகள் தங்களது பொருளாதாரத் தடை மூலமாக ரஷ்யாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனமாக இருக்கும்.

ரஷ்யாவிடம் இருப்பது “அப்பளம்” அல்ல.. அதி பயங்கர அணு ஆயுதங்கள்.. மிரளும் அமெரிக்கா!

இவர்கள் தடை விதித்துள்ள எந்த ரஷ்யருக்குமே நேரடியாக ரஷ்ய அரசுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது ரஷ்ய அரசு நிர்வாகம் எப்படி பாதிக்கப்படும். இதற்கு மேற்கத்திய நாடுகள் பதிலளிக்க வேண்டும் என்றார் அவர்.

ஆனால் அமெரிக்கா தடை விதித்துள்ள ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த தடையால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் புடினுக்கு நெருக்கடி கொடுத்து போரை நிறுத்த முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இதனால்தான் ரஷ்ய கோடீஸ்வரர்களைக் குறி வைத்து தடை விதித்து வருகிறது அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும்.

ஆயுதங்களை அளவில்லாமல் அள்ளிக் கொடுங்க.. நேட்டோவுக்கு உக்ரைன் கோரிக்கை

இதுகுறித்து ப்ரூக் ஹாரிங்டன் என்ற சமூகவியல் பேராசிரியர் கூறுகையில், ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் மிகப் பெரிய அளவில் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களது வாழ்க்கைக்கும், சாதாரண ரஷ்யர்களின் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு நாட்டில் இரு விதமான மக்கள் வசிப்பதை இது அம்பலப்படுத்துகிறது. புடினின் உக்ரைன் ஊடுறுவலால் ரஷ்யா மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை விரைவில் சந்திக்கப் போகிறது என்றார்.

அமெரிக்கா தடை விதித்துள்ள ரஷ்யப் பெரும் பணக்காரர்களில் முக்கியமானவர் ரோமன் அப்ரமோவிச். இவர் ஒரு யூதர் ஆவார். இஸ்ரேல் நாட்டுக் குடிமகனாகவும் இவர் இருக்கிறார். இஸ்ரேலின் நம்பர் 2 கோடீஸ்வரர் இவர். செல்சியா என்ற சர்வதசே கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். ரஷ்யாவின் 11வது பெரும் பணக்காரர் இவர். புடினுக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. இவரைப் போல பல பெரும் பணக்கார ரஷ்யக் கோடீஸ்வரர்களின் சொத்துக்களைத்தான் அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது.

அகதிகளைச் சந்திக்கிறார் பிடன்

இதற்கிடையே, நான்கு நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன், போலந்து – உக்ரைன் எல்லையில் உள்ள ஒரு ஊருக்குப் பயணமாகிறார். அங்கு உக்ரைன் அகதிகளை அவர் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் 1 விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள செஸ்கோவ் நகருக்கு வருகை தரும். அங்கிருந்து அருகில் உள்ள அகதிகள் முகாமுக்கு பிடன் செல்கிறார். அங்கு அகதிகளை அவர் சந்திக்கவுள்ளார். உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து அங்கிருந்து கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போலந்துக்கு தப்பி வந்துள்ளனர். தலைநகர் வார்சாவில் மட்டும் 3 லட்சம் பேர் அகதிகளாக தங்கியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். பிடன் தனது போலந்து வருகையின்போது அந்த நாட்டு அதிபர் ஆண்டிரஸ் டுடாவையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.