தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கண்மாயை ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்டிருந்த வாழை மரங்களை, பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
தேவதானப்பட்டியில் உள்ள செங்குளம் கண்மாயில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளர்கள் வாழை, கொய்யா உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரிலும் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரிலும் செங்குளம் கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.