கடுமையான டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா வழங்குகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, 500 மில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவிடம் மாதாந்திர அடிப்படையில் எரிபொருளை கடனாக பெறுகிறது.
இந்நிலையில் அவசர பற்றாக்குறையை சமாளிக்க டீசல் வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை ஏற்று40 ஆயிரம் டன் டீசலை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது.
உக்ரைன், ரஷ்யா விவகாரத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரத்தன்மை இழப்பு, உலகளவிலான விநியோக சங்கிலி தடை உள்ளிட்ட காரணங்களுக்கு மத்தியில் இலங்கயில் கோரிக்கையை ஏற்று உடனடியாக டீசல் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
பொருளாதார மந்தநிலையை சீரமைக்க இலங்கைக்கு ஏற்கனவே 1 பில்லியன் டாலர் மதிப்பிலான குறுகிய கால கடன் உதவியை இந்தியா வழங்கியது.