டைட்டன்-ல் டாடா விட அதிக பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா..? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

இந்திய பேஷன் மற்றும் ஆடம்பர சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், டாடா குழுமத்திற்கு அதிகப்படியான லாபத்தை அளிக்கக் கூடிய நிறுவனமாகவும் திகழ்வது டைட்டன் நிறுவனம். பேஷன் பிரிவில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களும் புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தினாலும் டைட்டன் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

இப்படிப்பட்ட நிறுவனத்தை டாடா நிர்வாகம் செய்து வந்தாலும், டாடா குழுமத்தை விடவும் ஒரு பிரிவு அதிகப் பங்குகளை இந்நிறுவனத்தில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆதிக்கம் செய்து வருகிறது. அது யார் தெரியுமா..?!

1 லட்சம் முதலீட்டில் 12 லட்சம் லாபம் கொடுத்த டாடா பங்குகள்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

 டைட்டன் நிறுவனம்

டைட்டன் நிறுவனம்

டைட்டன் நிறுவனம் தனிஷ்க் பிராண்டின் கீழ் நகைகள், பாஸ்ட்டிராக் பிராண்டின் கீழ் கை கடிகாரங்கள் மற்றும் டைட்டன் ஐ பிளஸ் பிராண்டின் கீழ் மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றைச் சொந்தமாகத் தயாரித்து இந்திய ஃபேஷன் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.

TIDCO

TIDCO

டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டைட்டன் நிறுவனம் TIDCO உடனான கூட்டணியில் உருவானது. 1984ஆம் ஆண்டுக் குவாட்ஸ் வாட்சுகளைத் தயாரிக்க இக்கூட்டணி ஓசூரில் தொழிற்சாலை அமைத்தது. தற்போது டைட்டன் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியிலும், ஓசூரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகமும் உள்ளது.

டாடா பங்கு இருப்பு
 

டாடா பங்கு இருப்பு

டைட்டன் நிறுவனத்தில் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்ரேஷன், டாடா கெமிக்கல், ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், Piem ஹோட்டலஸ் போன்ற 11 நிறுவனங்கள் இணைந்து 20.85 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

ஆனால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) டைட்டன் நிறுவனத்தில் மட்டும் சுமார் 24,74,76,720 பங்குகளை வைத்துள்ளது. இந்த 25 கோடி பங்குகள் டைட்டன் நிறுவனத்தின் மொத்த பங்கு இருப்பில் 27.88 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் டைட்டன் நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் முதன்மை ப்ரோமோட்டராகவும் உள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO).

65000 கோடி ரூபாய்

65000 கோடி ரூபாய்

மேலும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) வைத்துள்ள டைட்டன் பங்குகள் மட்டும் சுமார் 65000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதோடு டைட்டன் குழுமத்தில் சேர்மன் ஆகத் தமிழ்நாடு அரசு சார்பாகா என்.முருகானந்தம் உள்ளார். இவரைத் தொடர்ந்து வி அருண் ராய், பங்கஜ் குமார் பன்சால் ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டைட்டன் உயர்மட்ட குழுவில் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

who own Tata group TITAN? Tamilnadu Govt agency TIDCO is the biggest stake Holder

who own Tata group TITAN? Tamilnadu Govt agency TIDCO is the biggest stake Holder டைட்டன்-ல் டாடா விட அதிகப் பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா..? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

Story first published: Friday, March 25, 2022, 17:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.