தனுஷ் செய்யப்போகின்ற தரமான சம்பவம்.. குஷியில் ரசிகர்கள்..!

நடிகர்
தனுஷ்
தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும்
வாத்தி
, ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம்,
செல்வராகவன்
இயக்கத்தில்
நானே வருவேன்
ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் தனுஷ்.

கடந்த சில படங்கள் சறுக்கிய நிலையில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார் தனுஷ். எனவே அவரும் அவரது ரசிகர்களும் இப்படங்கள் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என நம்பியுள்ளனர்.

ஒருநாள் இரவில் என் வாழ்க்கை மாறியது : தனுஷ்

இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.இப்படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஏனென்றால் தனுஷ், செல்வராகவன்,
யுவன் ஷங்கர் ராஜா
கூட்டணியில் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் உருவாவதால் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கெத்தாக சிகரெட்டை பிடித்துக்கொண்டு தனுஷ் இருக்கும் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது. மேலும் இப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், மிகப்பிராமாண்டமாக உருவாகியுள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் திரையில் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திதலைவர் செய்த மாஸ் சம்பவம்: உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.