கொழும்பு- நம் அண்டை நாடான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டணி யைச் சேர்ந்த தலைவர்களை, நேற்று முதல் முறையாக சந்தித்துப் பேசினார்.
கோத்தபய ராஜபக்சே, ௨௦௧௯ல் இலங்கை அதிபராக பதவியேற்றார். அதன்பின், அவர் இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களை சந்தித்து பேசவில்லை. இதையடுத்து, இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், அதிபர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி, தங்களுடன் கோத்தபய ராஜபக்சே விவாதிக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம், ‘தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்குவது; மாகாண கவுன்சில் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில், 13வது திருத்த சட்டத்தை நடைமுறை செய்ய வேண்டும்’ என கூட்டணியின் தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement