தலைவர் செய்த மாஸ் சம்பவம்: உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

பிகினி போட்டோக்களுக்கு குவிந்த விமர்சனம்: திவ்ய பாரதியின் வேற லெவல் பதிவு..!

‘தலைவர் 169’ பட அறிவிப்பிற்காக மோஷன் போஸ்டர் ஒன்று வெளியானது. ரஜினி, நெல்சன், அனிருத் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது தென்னிந்தியாவில் வெளியான பட அறிவிப்புகளிலே ‘தலைவர் 169’ பட அறிவிப்பு நான்கு கோடி லைக்குகளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

‘தலைவர் 169’ பட அறிவிப்பே இந்த அளவிற்கு சாதனை படைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திநட்புக்காகத்தான் நடித்தேன் ….! காசை கொடுத்து அசிங்க படுத்த வேணாம்…! பணத்தை வாங்க மறுத்த சல்மான் கான்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.