உக்ரைனில், திரையரங்கு ஒன்றில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொது மக்கள் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
சோவியத் யூனியனில் இருந்து,
உக்ரைன்
தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, அந்நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள மக்களின் பழக்க வழக்கம், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை ரஷ்யாவுடன் ஒத்து போவதால், அந்நாட்டை, தங்களது நாடாகவே,
ரஷ்யா
கருதி வருகிறது.
இந்த பிரச்னை ஒரு புறம் இருக்க,
அமெரிக்கா
, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க, ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, கடந்த சில வாரங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யாவிடம் இருப்பது “அப்பளம்” அல்ல.. அதி பயங்கர அணு ஆயுதங்கள்.. மிரளும் அமெரிக்கா!
தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான், மரியுபோல் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யப் படைகளால் கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில், கடந்த வாரம் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யப் படைகளுக்கு பயந்து இந்தத் திரையரங்கில் 300 பேர் பதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை
மரியுபோல்
நகர நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.