திருபாய் அம்பானி அப்பவே அப்படி.. ஆடிப்போன இந்திய அரசு..!

இந்தியாவில் தற்போது முன்னணி நிறுவனங்கள் போதுமான முதலீட்டைத் தனியார் முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாகத் திரட்டிய பின்பு ஐபிஓ வாயிலாகப் பொதுச் சந்தையில் முதலீட்டைத் திரட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதில் குறியாக இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் DRHP விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.

தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!

ஆனா மத்திய அரசு செபி அமைப்பை உருவாக்குவதற்கு 11 வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் உருவாக்கிய திருபாய் அம்பானி 1977 ஆம் ஆண்டில் தான் துவங்கிய ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ் தான் முதல் முறையாகப் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டியது.

திருபாய் அம்பானி வெற்றி

திருபாய் அம்பானி வெற்றி

இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் இத்தகைய முறை மிகவும் பிரபலமாக இருந்தாலும், இந்தியாவில் இதை யாரும் பயன்படுத்தவில்லை. சிறுவயதிலேயே திருபாய் அம்பானி வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவம் இருந்த காரணத்தால் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கி வெற்றிகண்டார்.

இந்தியாவில் முதல் ஐபிஓ
 

இந்தியாவில் முதல் ஐபிஓ

மேலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இந்தியா முழுக்க ரிலையன்ஸ் பெயரை கொண்டு செல்லவும், அதேவேளையில் பணத்தைத் திரட்ட வேண்டும் என்பதற்காகத் திருபாய் அம்பானி துவங்கிய ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தைச் சுமார் 2.82 கோடி ரூபாய் விலைக்கு நிர்ணயம் செய்து விற்பனை செய்தார். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் சுமார் 7 மடங்கு அதிகப் பங்குகளுக்கு முதலீடு குவிந்தது.

சிறு முதலீட்டாளர்கள்

சிறு முதலீட்டாளர்கள்

திருபாய் அம்பானி தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த பொது மூலதனத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் சிறு முதலீட்டாளர்கள் என்பதால் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வரையில் ஒவ்வொரு நிறுவன வருடாந்திர பொதுக் கூட்டங்களைப் பெரிய திருவிழா போலப் பொது வெளியில் நடத்தினார். இதன் மூலம் ரிலையன்ஸ புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

செபி அமைப்பு

செபி அமைப்பு

இவை அனைத்தையும் தாண்டி திருபாய் அம்பானி தனது ஐபிஓ-வை 1977ஆம் ஆண்டு வெளியிட்டார். ஆனால் 11 ஆண்டுகளுக்குப் பின்பு தான் அதாவது 1988ஆம் ஆண்டுத் தான் செபி அமைப்பு உருவாக்கப்பட்டது. செபி 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் 1992ஆம் ஆண்டுத் தான் செபி அமைப்புக்கான முழு அதிகாரம் மத்திய அரசு கொடுத்தது.

1991 தாராளமயமாக்கல்

1991 தாராளமயமாக்கல்

இந்தியாவின் 1991 தாராளமயமாக்கல் செய்யப்பட்ட 5 ஆண்டுக் காலத்தில் திருபாய் அம்பானி சுமார் 4 முக்கிய ஐபிஓ-க்களை வெளியிட்டது, ஐபிஓ வெளியிடும் போது சிறப்பான வரவேற்பைப் பெற்றாலும் முதலீட்டாளர்களைக் கவரும் வண்ணம் வருமானத்தைக் காட்ட முடியாத காரணத்தால் 4 நிறுவனங்களும் ரிலையன்ஸ் உடன் சேர்க்கப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

1977 முதல் இன்று வரையில் ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் பங்குகளுக்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது. இன்றும் டாப் 30 நிறுவன பட்டியலில் ரிலையன்ஸ் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ நிறுவனத்தை ஐபிஓ வெளியிட முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know who issued India First IPO: Dhirubhai Ambani’s Reliance Textiles Industries in 1977

Do you know who issued India First IPO: Dhirubhai Ambani’s Reliance Textiles Industries in 1977 திருபாய் அம்பானி அப்பவே அப்படி.. 1977ல் செய்த தரமான சம்பவம்..! இந்தியாவின் முதல் ஐபிஐ வெளியிட்ட ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.