திருமலை: திருமலையில் வரும் ஏப்ரல் மாத விசேஷ தினங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 2-ம் தேதி தெலுங்கு உகாதி ஆஸ்தானம், 3-ம் தேதி மத்ஸய ஜெயந்தி, 10-ம் தேதி ஸ்ரீராம நவமி ஆஸ்தானம், 12-ம் தேதி சர்வ ஏகாதசி, 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம், 26-ம் தேதி பாஷ்யகாரர் (ராமானுஜர்) உற்சவம், 29-ம் தேதி மாத சிவராத்திரி, 30-ம் தேதி சர்வ அமா வாசை ஆகியவை கோயிலில் அனுசரிக்கப்பட உள்ளது.
திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பக்தி சேனல் அலுவலகத்தில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் சுப்பா ரெட்டி பேசு கையில், “விரைவில் சென்னை மற்றும் பெங்களூருவில் தேவஸ் தான பக்தி சேனல் அலு வலகங்கள் அமைக்கப்படும். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தேவஸ்தான எஸ்விபிசி சேன லுக்கு வரவேற்பு உள்ளது. ஆதலால் இம்மாநிலங்களில் நடைபெறும் அனைத்து ஆன்மீக நிகழ்வுகளையும் இந்த சேனல்களில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க உள்ளோம். சமீபத்தில் ஹிந்தியிலும் எஸ்விபிசி சேனல் தொடங்கப்பட்டது. இதற்கும் வட இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. வரும் உகாதி பண்டிகையான ஏப்ரல் 2-ம் தேதி முதல் ‘யோக தரிசனம்’ எனும் புதிய நிகழ்ச்சி வெளிவர உள்ளது” என்றார்.