நட்புக்காகத்தான் நடித்தேன் ….! காசை கொடுத்து அசிங்க படுத்த வேணாம்…! பணத்தை வாங்க மறுத்த சல்மான் கான்…!

காட்ஃபாதர்
படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சல்மான் கான் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் நடிக்கும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன.மலையாளத்தில்
மோகன்லால்
நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் லூசிபர். இப்படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கி இருந்தார்.

அவர் இயக்கிய முதல் படம் இதுதான். மோகன்லால் உடன் மஞ்சு வாரியர்,
டோவினோ தாமஸ்
போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர்
சிரஞ்சீவி
நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர்
மோகன் ராஜா
இயக்கி உள்ளார்.

10 பெண்களோட உறவு வைச்சுருக்கேன்: தனுஷ் பட நடிகரின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

இவர் தமிழில் ஜெயம், எனக்கும் உனக்கும்,
சந்தோஷ் சுப்ரமணியம்
, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி போன்ற பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார்.இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காட்ஃபாதர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சல்மான் கான் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் நடிக்கும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகர் சல்மான் கானுக்கு ரூ.20 கோடியை படக்குழு சன்மானமாக கொடுத்துள்ளது. ஆனால் இதனை வாங்க மறுத்த சல்மான் கான், சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி மீதுள்ள நட்பின் காரணமாகத் தான் இப்படத்தில் நடித்ததாகவும், இதற்காக காசெல்லாம் வேண்டாம் என்றும் கூறி படக்குழுவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினாராம்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திபிகினி போட்டோக்களுக்கு குவிந்த விமர்சனம்: திவ்ய பாரதியின் வேற லெவல் பதிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.