Tamilnadu CM Stalin Memes Update : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்று முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் தொடங்கிய துபாய் எக்ஸ்போ தொழிற்கண்காட்சியில் தமிழகத்திற்கு அரங்கு அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியம் கலாச்சாரம், தமிழ் மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் நேற்று மாலை துபாய் சென்றடைந்தார்.
இதுவரை இந்தியாவில் வேட்டி சட்டையுடன் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்துவம் கையில் தோன்றிய முதல்வர் ஸ்டாலின், தற்போது வெளிநாடு பயணத்தில், கோட் சூட் போட்டுக்கொண்டு என்றும் இளமை என்பதை உணர்த்தும் வகையில், தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவருடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப நபர்களும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றாலும் அவர் அங்கு என்ன செய்கிறார் என்ற அனைத்து விவரத்தையும் எங்கள் தலைவர் அண்ணாமலை கூகுள் மூலம் மென்பொருளில் கண்காணித்து வருகிறார்
– கராத்தே தியாகராஜன், பாஜகMeanwhile அண்ணாமலை Google Map அட்ராசிட்டி 😀😀😀எங்கடா இங்க இருந்த ரோட்ட காணோம் pic.twitter.com/QFcUfX3D1z
— Shamurai (@Shamurai10) March 25, 2022
பங்குனி HEATu போடு Winter Jacketu 🤣🤣#DMK_ON_Dubaitrip pic.twitter.com/J9iOb9Ky0b
— SEEMANISM ARMY 😎 (@SeemanismNtk) March 25, 2022
Dravidian Stocks 🖤❤️#CMStalinInUAE pic.twitter.com/lEiu5XgKdR
— Dr Mahendran R (@drmahendran_r) March 25, 2022
#CMStalinInUAE pic.twitter.com/JKT6SuMBQf
— PD Mathi (@PD_mathi) March 25, 2022
#CMStalinInUAE pic.twitter.com/4pZRTlCanm
— PD Mathi (@PD_mathi) March 25, 2022
“முதல்வர் வெளிநாட்டுக்கு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனால் முதலீடுகள் நாட்டுக்காக, முதல்வருக்கா..ன்னுதான் தெரியல”
எனச் சொன்ன @mkstalin இப்படி செய்யலாமா? pic.twitter.com/vMwFp7VKoQ
— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) March 25, 2022
மேலும் பல மீம்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாடு பயணம் சென்றது நெட்டிசன்களுக்கு ஒரு ட்ரீட்டாகவே அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “